Sunday, July 19, 2015

அனைத்து கருவிகளில் இருந்தும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி ..

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும். ஷார்ட்கட்


ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி 1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள். 
 
 2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
 
3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்
 
 4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்
 
 5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 
 
யுஎஸ்பி பிக்ஸ் UsbFix மென்பொருள் கொண்டு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி 
 
 1. முதலில் பென்டிரைவை உங்களது கணினியில் இணைத்து யுஎஸ்பி பிக்ஸ் UsbFix மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள், இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 
 
2. ஆன்டிவைரஸ் தடுத்தாலும் சற்று நேரத்திற்கு டிஸ்ஏபிள் செய்யுங்கள்
 
3. அடுத்து usbfix ஓபன் செய்து ரிசர்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் 
 
 4. உங்களது பென் டிரைவை ரிசர்ச் செய்ய இந்த மென்பொருள் சிறிது நேரம் எடுத்து கொள்ளும், அதன் பின் ரிசர்ச் அறிக்கையை வார்த்தைகளாக காட்டும். 
 
5. அடுத்து 'Clean' க்ளீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் எவ்வித ஷார்ட்கட்களும் அழிந்து விடும் 
 
 6. இது முடிந்த பின் 'Vaccinate' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ் மீண்டும் வைரஸ் தாக்கப்படாமல் இருக்கும்.

No comments:

Post a Comment